.webp)
Colombo (News 1st) 2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 478,182 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.