.webp)
Colombo (News1st) குருணாகல் பகுதியிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு(23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
17 பெண்களும் 4 ஆண்களும் விபத்தில் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 54 பேர் பயணித்துள்ளனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.