தொழிற்சங்க நடவடிக்கை போக்குவரத்து அமைச்சுஅதிருப்தி

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் போக்குவரத்து அமைச்சு அதிருப்தி..

by Staff Writer 17-05-2025 | 12:18 PM

ரயில்வே திணைக்களத்தில் காணப்பட்ட வெற்றிடங்களுக்காக 909 பேரை சேவையில் இணைத்துக்கொள்ள இந்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளாக 106 பேரை சேவையில் இணைக்க அனுமதி பெறப்பட்டதாகவும் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் அமைச்சு மட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் திணைக்களத்தின் அசமந்தநிலை குறித்து கலந்துரையாடி தீர்வுகாணாது  பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் போக்குவரத்து அமைச்சு அதிருப்தியை வௌியிட்டுள்ளது.