.webp)
Colombo (News 1st) கண்டி - அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுற்றுலா சென்ற தரப்பினரே நேற்றிரவு(12) விபத்திற்குள்ளானதுடன் விபத்தின் போது பஸ்ஸில் 38 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 37 பேரும் பேராதனை, கண்டி மற்றும் தித்தபஜ்ஜல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.