குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கைது

6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கைது

by Staff Writer 19-04-2025 | 2:53 PM

Colombo (News 1st) ஆறு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 5 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.