.webp)
Colombo (News 1st) பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று(10) ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 9.30க்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
பட்டலந்த வீட்டுத்தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச்சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து 2 நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான 2 நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை எதிர்வரும் மே மாதத்தில் ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மார்ச் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.