.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மேலாடை, LTTE அமைப்பினருடையது என தெரிவித்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - வவுணதீவிலுள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிய 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.