சீனா மீதான புதிய வரி இன்று முதல் அமுல்

சீனா மீதான 104 வீத தீர்வை வரி இன்று(09) முதல் அமுல் - வெள்ளை மாளிகை

by Staff Writer 09-04-2025 | 2:43 PM

Colombo (News 1st)  சீனா மீது இன்று(09) முதல் 104 வீத தீர்வை வரி விதிக்கப்படுவதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 முதல் புதிய வரி விதிப்பு அமுலாகின்றது.

அமெரிக்க பொருட்கள் மீது சீனா விதித்த 34 வீத வரியை மீளப்பெற சீனாவிற்கு வழங்கப்பட்ட 24 மணித்தியால கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் அமெரிக்காவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02ஆம் திகதி சர்வதேச நாடுகள் மீது தீர்வை வரி தொடர்பிலான அறிவிப்பை வௌியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பிற்கு அமைய அனைத்து நாடுகளுக்கும் 10 வீதத்திலிருந்து 60 வீத தீர்வை வரி இன்று(09) முதல் அமுலாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.