வாள்வெட்டு தாக்குதல் ; நால்வர் விளக்கமறியலில்..

கொக்குவில் வாள்வெட்டு தாக்குதல் ; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்..

by Staff Writer 12-03-2025 | 9:40 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் கடந்த 3ஆம் திகதி வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது. 

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மறைந்திருக்கும் இடம் தொடர்பில் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.