விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள்

விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்களென தகவல்

by Staff Writer 11-03-2025 | 12:23 PM

COLOMBO (News 1st) சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் எதிர்வரும் 16ஆம் திகதி பூமிக்கு திரும்புவார்களென தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  காரணமாக 08 நாள் பயணமாக விண்வெளி சென்ற அவர்கள், அங்கு 09 மாதங்களாக சிக்கியுள்ளனர்.

இந்நிலையில்  நாஸா அதிகாரிகள்,  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதை  உறுதி செய்துள்ளனர்

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சர்வதேச விண்வெளி மையம் இடையே இணைப்பை ஏற்படுத்தி அவர்களை பூமிக்கு அழைத்துவர நடவடிக்​கை எடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஏனைய செய்திகள்