.webp)
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.