அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

by Staff Writer 16-02-2025 | 6:25 PM

Colombo (News 1st) அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று(16) முற்பகல் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 135 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் செயலாளராக சிவா ராமசாமி மற்றும் பொருளாளராக வருணி ஐசாக் ஆகியோர் தெரிவாகினர்.

உப தலைவர், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.