கோப் குழு 18ஆம் திகதி கூடுகின்றது

முதல் தடவையாக கூடும் கோப் குழு

by Staff Writer 02-02-2025 | 7:47 PM

Colombo (News 1st) கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளது.

முதல் நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினருக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோப் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இதுவரை எவரும் பெயரிடப்படவில்லை.