தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது

by Staff Writer 15-01-2025 | 3:19 PM

Colombo (News 1st) தென் கொரியாவின் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி Yoon Suk Yeol ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ ஆட்சியை அறிவித்த பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டYoon Suk Yeol, உள்நாட்டிலேயே கைது செய்யப்பட்ட முதலாவது பதவியிலுள்ள ஜனாதிபதி ஆவார்.

தேவையற்ற இரத்தக்களறியை தடுப்பதற்காகவே தனக்கெதிரான வழக்கை நடத்தும் ஊழல் விசாரணை அலுவலகத்தில் ஆஜராக ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது சட்டவிரோத விசாரணை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol-ஐ கைது செய்வதற்கு அதிகாரிகள் இன்று இரண்டாவது தடவையாகவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.