தழிழரசுக் கட்சியினருடன் அநுரகுமார கலந்துரையாடல்

இலங்கை தழிழரசுக் கட்சியினருடன் அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடல்

by Bella Dalima 11-06-2024 | 4:00 PM

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த  சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் C.V.K.சிவஞானம், நிர்வாக செயலாளர் சேவியர் குலநாயகம், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.