Taiwan: தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள பிரிவில், இன்குபேட்டர்களில் (Incubators) உள்ள குழந்தைகளை பாதுகாக்க தாதியர்கள் விரைந்து செயற்படும் CCTV காட்சி வௌியாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் மருத்துவமனை கட்டடம் ஆட்டம் காண்கையில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள கட்டில்களை இறுகப் பிடித்துக்கொண்டு மிக வேகமாக தாதியர்கள் செயற்படுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவில், கட்டடம் நடுங்கத் தொடங்கியதும் நான்கு தாதியர்கள் தாம் முன்னுரிமையளிக்க வேண்டிய விடயம் எதுவென தௌிவாகத் தெரிந்துகொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
அவர்களின் கண்கள் அருகில் உள்ள ஜன்னல்களை நோக்கிச் செல்கிறது. ஜன்னல்கள் திறந்தால், பறக்கும் குப்பைகளும் தூசுகளும் அக்குழந்தைகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.
தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், அங்கு 9 பேர் உயிரிழந்ததுடன், 1000 பேர் வரையில் காயமடைந்தனர்.