பூண்டுலோயா, மதுரங்குளியில் இருவர் கொலை

பூண்டுலோயா, மதுரங்குளியில் இருவர் கொலை

by Staff Writer 31-12-2024 | 6:30 PM

Colombo (News 1st) பூண்டுலோயா மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயாவை சேர்ந்த 29 வயது இளைஞரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் தந்தையும் இளைய சகோதரரும் இணைந்த இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மதுரங்குளி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய செய்திகள்