Colombo (News 1st) 2025ஆம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு கொழும்பு - காலிமுகத்திடலை அண்மித்து இன்று(31) விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வருட பிறப்பை முன்னிட்டு பாரிய அளவிலான மக்கள் காலிமுகத்திடலுக்கு இன்று(31) இரவு வேளையில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இதற்கமைய புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.