பொலிஸின் YouTube சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube கணக்கு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

by Staff Writer 31-12-2024 | 10:27 AM

Colombo (News 1st) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube கணக்கு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

தற்போது அந்த கணக்கின் நிர்வாகம் முழுமையாக அதன் நிர்வாகிகளினால்(Admin) இழக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

நேற்று(30) இரவு 7.30 அளவில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த YouTube கணக்கை வழமைக்குக் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வௌியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.