வாகனங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள்

நாளை முதல் வாகனங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ்

by Staff Writer 22-12-2024 | 8:00 PM

Colombo (News 1st) நாளை (23) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பயணிகள் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

24 மணித்தியாலங்களும் இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.