Colombo (News 1st) பாகிஸ்தான் ரயில்வே நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 44 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குவேட்டா(Quetta) நகரிலுள்ள ரயில் நிலையத்திலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றது.
பெஷாவர்(Peshawar) செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரயில்வே தளத்திலிருந்து புறப்படும் சந்தர்ப்பத்திலேயே குண்டுவெடித்துள்ளது.
குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாகிஸ்தானின் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத இனப் போராளிகள் மற்றும் வடமேற்கில் இஸ்லாமிய போராளிகளின் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டில் குழப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.