இன்று(31) முதல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

இன்று(31) முதல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 31-10-2024 | 9:37 AM

Colombo (News 1st) இன்று(31) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்