புதிய கடன்கள் பெறப்படவில்லை - விஜித ஹேரத்

புதிய கடன்கள் பெறப்படவில்லை - விஜித ஹேரத்

by Staff Writer 29-10-2024 | 2:37 PM

Colombo (News 1st) அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.