Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10 தசம் ஆறு வீதத்தினால் வலுவடைந்துள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 328 ரூபா 77 சதமாக காணப்பட்டது.
நேற்று(24) அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 298 ரூபா 11 சதமாக பதிவாகியது.