Colombo (News 1st) நிலவும் அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு தேவையேற்படின் பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வௌ்ளம் காரணமாக களனி மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயங்களில் 4 பாடசாலைகளுக்கு நாளை(14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை, யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் என்பனவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்குமென மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது.