Colombo (News 1st) பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alberto Fujimori தனது 86ஆவது வயதில் இன்று(12) காலமானார்.
1990 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை பெருவை ஆட்சி செய்த இவர் மீது மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஊழல் மோசடிகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வௌியேறினார்.
அதன் பின்னர் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 25 ஆண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 15 வருடங்களின் பின்னர் சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட Alberto Fujimori புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.