தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை முன்னிட்டு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.
நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தபால்மூல வாக்களிப்பை கண்காணிக்க நடமாடும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.