Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அவர் முதலதைடவையாக தெரிவானார்.
இதனையடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.