.webp)
-606830-552256.jpg)
Colombo (News 1st) புத்தாண்டுக்கு தயாராகும் மக்களுக்காக இன்றும் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயணிகளின் தேவைக்கேற்ப இன்றும் பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரிசிறி தெரிவித்தார்.
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பஸ் சேவைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
