தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் இடையூறு இல்லை

தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் எவ்வித இடையூறும் இல்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

by Staff Writer 01-08-2024 | 6:29 AM

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் எவ்வித இடையூறும் ஏற்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகளை தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்துமாறு, தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போன்று இம்முறையும் முறையான விதத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில்  கலந்துரையாடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று(31) அழைக்கப்பட்டிருந்தார்.