Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல் கோவையை வெளியிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச அதிகாரிகளின் பக்கச்சார்பான நடவடிக்கைகளால், பொதுமக்களின் உரிமைகள் மீறப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் ஆராய்ந்து வழிகாட்டுதல் கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.