Colombo (News 1st) ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
அதன்பிரகாரம்,
12.5 கிலோகிராம் சமையல்
எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும்
5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும்
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.