Colombo (News 1st) மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் கிரான் பகுதியில் இன்று(30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேனொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கிரான் வைரவர் கோவில் வீதியைச் சேர்ந்த 63 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.