மாணவர் சேர்க்கை சுற்றறிக்கையில் திருத்தம்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம்

by Bella Dalima 20-06-2024 | 3:54 PM

Colombo (News 1st) முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட அனுபவங்களுக்கு அமைய சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, புதிய சுற்றறிக்கைக்கு அமைவாகவே 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

சமமாக வாய்ப்புகளை வழங்கவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.