கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ரவி கமகே தெரிவு

by Bella Dalima 20-06-2024 | 6:16 PM

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மீளாய்வு  விழா இன்று (20) மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

2023 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக மனிதவள பிரிவின் பொது முகாமையாளர் ரவி கமகே தெரிவு செய்யப்பட்டார்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் 44 ஆவது வருடாந்த மீளாய்வு விழா இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. 

நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கலந்துகொண்டார்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் அவர்கள் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசேட அதிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பல நிறுவனங்கள் ஊடாக பல்வேறு துறைகளில் இலங்கை மக்களுக்காக சேவையாற்றிய  நிறைவேற்று அதிகாரிகளை கௌரவிப்பதற்காக வருடாந்தம் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

கெப்பிட்டல் மகாராஜா குழும நிறுவனங்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நிறுவனத்திற்காக வழங்கப்படுகின்ற RR விருது இம்முறை S-Lon Lanka தனியார் நிறுவனம் வசமானது.

 கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் ஐந்து நிறைவேற்று அதிகாரிகள் இம்முறையும் விசேட பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஸ்டெய்ன் ஸ்டூடியோவின் முகாமையாளர் சமித் பஸ்நாயக்க
S-Lon Lanka தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சதுரங்க தசநாயக்க
TCMOL-இன் இலத்திரனியல் பொறியியலாளர் டிலோஷன் பீற்றர்
நியூஸ்ஃபெர்ஸ்டின் லக்மால் கிரிந்திகல
Harcros Chemicals நிறுவனத்தின் நிதி முகாமையாளர் H.D.V.சுகததீர 

ஆகியோருக்கே இந்த விசேட பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.