இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை

by Staff Writer 20-06-2024 | 10:03 AM

Colombo (News 1st) இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) நாட்டிற்கு வருகை தந்தார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று(20) மாலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.