550 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழப்பு

ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 550 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழப்பு

by Bella Dalima 19-06-2024 | 3:31 PM

Colombo (News 1st) இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்தான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மெக்கா அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த திங்கட்கிழமை மெக்காவில் உள்ள அல் ஹராம் மசூதியில் சுமார் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக சவுதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யாத்திரையின் போது கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,000 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.