.webp)
Colombo (News 1st) மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் இன்று(09) காலை ஆரம்பமாகியது.
பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
பிஜு ஜனதா தளம் சட்ட மன்ற உறுப்பினர்கள், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 13 சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.