புது டெல்லியில் நாளாந்த மின்சாரத் தேவை அதிகரிப்பு

புது டெல்லியில் நாளாந்த மின்சாரத் தேவை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

by Bella Dalima 19-06-2024 | 2:46 PM

New Delhi: கடும் வெப்பம் காரணமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் நாளாந்த மின்சாரத் தேவை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 

இவ்வாரத்தில் மின்சாரத் தேவை புது டெல்லியில் 8,647 மெகாவட்ஸ் ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் நாளாந்த மின்சார தேவை 4000 MW ஆக காணப்பட்டது. 

கடந்த சில மாதங்களாக வட இந்தியாவில் வெப்பம் 45 செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது. 

இந்த நிலையில், வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக மக்கள் மின் விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளை அதிகளவு பயன்படுத்துவதால், மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

வட இந்தியாவில் வரலாற்றில் அதியுயர் மின்சார பாவனையாக 89,000 MW பதிவாகியுள்ள நிலையில், டெல்லியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.