56 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

by Bella Dalima 18-06-2024 | 4:09 PM

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் இன்று (18) ஆரம்பமாகியுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk  தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பாலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று ஆரம்பமாகும் 56 ஆவது கூட்டத்தொடர் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பான விவகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.