.webp)
Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ செயற்படுவதைத் தடுத்து விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜேதாச ராஜபக்ஸ கட்சியின் உறுப்பினராக செயற்படுவதற்கும் இந்த இடைக்கால தடையுத்தரவில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு, மனுவின் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இதற்கான கால அவகாசத்தை வழங்கி இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.