துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 10-06-2024 | 2:47 PM

Colombo (News 1st) ஹூங்கம - ரத்ன பகுதியிலுள்ள திஸ்ஸ வீதி பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் வீட்டின் பின்புறத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தகர் வீழ்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே அவருக்கு சொந்தமான துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

51 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.