லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

by Bella Dalima 04-06-2024 | 3:44 PM

Colombo (News 1st) இன்று (04) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 65 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. 

இதற்கமைய 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 60 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 28 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.