ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் தரையிறக்கம்

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

by Staff Writer 19-05-2024 | 9:22 PM

Colombo (News 1st) ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அசர்பைஜானை அண்மித்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரை ஏற்றிய ஹெலிகொப்டர், ஈரான் - அசர்பைஜான் எல்லையை அண்மித்த ஜொல்பா நகரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி 'த ஹிந்து' வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட இடத்தை மீட்புக்குழு அண்மித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இன்று(19) காலை அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.