MD2 வகை அன்னாசி செய்கைக்கான ஆய்வுகள் வெற்றி

இலங்கையில் MD2 வகை அன்னாசி செய்கைக்கான ஆய்வுகள் வெற்றியளித்துள்ளன

by Staff Writer 19-04-2024 | 6:06 PM

Colombo (News 1st) உலகில் மிகவும் பிரபலமான MD2 வகை அன்னாசிப் பழத்தை இலங்கையில் செய்கையிடுவதற்கான பரிந்துரைகளை உடனடியாக வழங்குமாறு விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையில் MD2 அன்னாசியை செய்கையிடுவதற்கான ஆய்வுகள் வெற்றியளித்துள்ளதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வகை அன்னாசியை செய்கையிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.