.webp)

Colombo (News 1st) 2025 ஆம் ஆண்டில் இலங்கை 2.5% பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தியின் மதிப்பீடு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 1.9% மிதமான வளர்ச்சியைக் காண்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், அதற்கான சீர்திருத்தங்களின் வேகத்தை தக்கவைக்க வேண்டியதன் அவசியம் காணப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வலியுறுத்தியுள்ளது.
