அரிசி, இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதி வரி குறைப்பு

அரிசி, இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு

by Staff Writer 28-03-2024 | 4:07 PM

Colombo (News 1st) அரிசி மற்றும் இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கான வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரிச்சலுகை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே அமுலில் இருக்கும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 1 ரூபாவாக குறைக்கப்பட்ட விசேட வர்த்தக வரி  ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வர்த்தக பொருட்களுக்கான வரியாக 65 ரூபா அறவிடப்பட்டது.

இது 2024 ஜனவரி 21 அன்று அல்லது அதற்கு முன்னர் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெற்ற இறக்குமதியாளர்களுக்கே பொருந்தும்.

சுங்கக் குறியீடு 1006.30.29 இன் கீழ் ஏனைய அரிசி வகைகளில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பாவுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அதற்கு இணையான அரிசியை இறக்குமதி செய்வதற்காகவே இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.