பால் மா விலை குறைக்கப்படவுள்ளது

இன்று (15) முதல் பால் மா விலை குறைக்கப்படவுள்ளது

by Bella Dalima 15-03-2024 | 3:00 PM

Colombo (News 1st) இன்று (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விலைகள் குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.