நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: ஜனாதிபதி இணக்கம்

by Bella Dalima 14-03-2024 | 4:41 PM

Colombo (News 1st) நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்க அவர் தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில், நாளை (15) முதல் அனைத்து மாவட்டங்களிலும் இரு நெற்களஞ்சியசாலைகளிலிருந்து நெல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நெல் கொள்வனவிற்காக 2 பில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் வழங்கப்படவில்லையென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். 

இதனால் விவசாய நம்பிக்கை நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டு நெற்கொள்வனவை ஆரம்பித்ததாக அவர் கூறினார். 

இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தொடர்புபட்டதாகவும் இதற்கமைவாகவே 50 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய தீர்மானித்ததாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.