மர்மமான முறையில் திடீரெனத் தோன்றிய மோனோலித்

லண்டனின் வெல்ஷ் நகரில் மலை உச்சியில் மர்மமான முறையில் திடீரெனத் தோன்றிய மோனோலித்

by Bella Dalima 13-03-2024 | 4:10 PM

Colombo (News 1st) லண்டனின் வெல்ஷ் (Welsh) நகரில் Hay-on-Wye பகுதியில் உள்ள மலை உச்சியில் திடீரென ஒரு பிரம்மாண்ட உலோக மோனோலித் (ஒற்றைக்கல் - Monolith) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வௌ்ளி போல் பளபளப்பாக மின்னும் இதனை Hay-on-Wye அருகில் Hay Bluff பகுதியில் நடந்து செல்பவர்கள் கடந்த வார இறுதியில் கண்டுள்ளனர். 

சேற்றுப் பகுதியில் சுமார் 10 அடி உயரத்தில் உள்ள இந்த மோனோலித், திடீரென குறித்த இடத்திற்கு எவ்வாறு வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த பொருள் பூமிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமோ, ஏலியன்களின் வேலையாக இருக்குமோ எனவும் பலர் சமூக ஊடகங்களில் சந்தேகங்களை வௌியிட்டுள்ளனர். 

உள்ளூர்வாசியான  Craig Muir, நடைபயணத்தின் போது ஒரு வித ''UFO" என்று தான் கருதியதைக் கண்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த உலோகம் மாபெரும் Toblerone சொக்லேட் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.

மலை உச்சிக்கு அதனை சிலர் கொண்டு சென்று நாட்டியிருக்கலாம் அல்லது ஹெலிகொப்டர் மூலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என Craig Muir கருதுகிறார். 

எவ்வாறாயினும், இவ்வாறான மோனோலித் தென்படுவது முதன்முறையல்ல. 

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் Utah பாலைவனத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்களால் ஒரு மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டு, அது சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து காணாமல் போனது. 

அது காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு, வைட் தீவில் மற்றொரு மோனோலித் தோன்றியது.

Cornwall மற்றும் ஐரோப்பாவின் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் இதே போன்ற கட்டமைப்புகள் காணப்படுகின்றன.
 
Glastonbury Tor உச்சியிலும் ஒன்று தோன்றியது,  அதன் ஒரு பக்கத்தில் "Not Banksy" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

Mysterious hilltop monolith mistaken for UFO by Welsh builder – The Irish  News

 

Mystery as FIFTH monolith shaped like a giant Toblerone appears on remote Welsh  hilltop | Daily Mail Online

 

Craig Muir Monolith